சாலையில் சென்ற கார் மீது திடீரென மரம் விழுந்து விபத்து.. விபத்தில் வங்கி மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

சென்னையில் சாலையில் சென்ற கார் மீது திடீரென மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் வங்கி மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலையில் சென்ற கார் மீது திடீரென மரம் விழுந்து விபத்து.. விபத்தில் வங்கி மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

சென்னை போரூரை சேர்ந்த வாணி கபிலன் என்பவர் ஐஓபி வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கே.கே.நகர் லட்சுமணசாமி சாலையில் தனது தங்கையுடன் அவர் காரில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த மரம் திடீரென காரின் மீது விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்து காருக்குள் இருந்த வாணி கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த அவரது தங்கை எழிலரசி மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கழிவுநீர் கால்வாய்க்கு பள்ளம்  தோண்டும் போது ஏற்பட்ட மண் சரிவால் மரம் சாய்ந்து விழுந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.