
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மன்னாதி வயல் என்ற பகுதியில் உபயோகப்படுத்தாத பாழடைந்து கிணறு ஒன்று உள்ளது. அந்த வழியாக வந்த சிலர் கிணற்றை எட்டிப் பார்த்த போது குழந்தை இறந்து கிடந்தததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் பெண் குழந்தை வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த பகுதி கேரள மாநிலம் அருகாமையில் உள்ளதால் குழந்தை கேரளாவில் இருந்து கொண்டு வந்து கிணற்றில் வீசப்பட்டதா? அல்லது உள்ளூர் தம்பதிகள் ஏதேனும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.