பெண் வருவாய் அலுவலரை தாக்கிய பாஜகவினர்...... திருவண்ணாமலையில் பரபரப்பு...

திருவண்ணாமலை அருகே ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற பெண் வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வருவாய்  அலுவலரை தாக்கிய பாஜகவினர்...... திருவண்ணாமலையில் பரபரப்பு...
Published on
Updated on
1 min read
திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி ஏரிக்கரையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இறச்சிக்கடை அமைக்கப் போவதாக துரிஞ்சாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.  தகவலறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த பாஜக பிரமுகர் ரகுநாதன், சக்திவேல் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற வருவாய் அலுவலர்களை தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசியதோடு மட்டுமின்றி உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனை செல்போனில் படம் எடுத்த பெண் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகத்தை தாக்கி செல்போனை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுப்பட்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com