ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய நிர்வாகி மீண்டும் திமுகவில் சேர்ப்பு..!

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய நிர்வாகி  மீண்டும் திமுகவில் சேர்ப்பு..!

சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் புகாரும் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

sivaji krishnamurthy Archives - Archyde

இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த  சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 5  மாதத்திற்கு பிறகு மீண்டும் திமுகவில் உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

இதையும் படிக்க  } " ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை.." - டிடிவி தினகரன்.

இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திமுகவின் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதிக்குமாறு திமுக தலைவரிடம் வைத்த கோரிக்கையை ஏற்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இன்று முதல் கட்சி உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க  } " கருத்தியல் முரண்கள் இருந்தாலும்,... பாஜகவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்..!" - திருமாவளவன்.