"ராஜீவ்காந்தி" என்ற பெயரை தவிர்த்து "RGNIYD" என்றே பேசிய மத்திய அமைச்சர்

"ராஜீவ்காந்தி" என்ற பெயரை தவிர்த்து  "RGNIYD" என்றே பேசிய மத்திய அமைச்சர்


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் 3-வது பட்டமளிப்பு விழாவில், 877 மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். முதுகலை, ஆராய்ச்சி கல்வி, தொழில்முறை கல்வி முடித்த மாணவ மாணவிகளுக்கு அவர் பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், எல்லாரும் நல்லா இருக்கீங்களா என தமிழில் வினவினார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தின் 3 வது பட்டமளிப்பு விழா இன்று மைய வளாகத்தில் பயிற்சி மைய இயக்குநர் சிப்நாத்தேப் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் தகவல்  ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக்சிங்தாக்கூர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு,  முதுகலை பட்டப்படிப்பு  முடித்த 274 மாணவ மாணவியர்,  ஆராய்ச்சி கல்வி முடித்த 6 மாணவ மாணவியர், தொழில்முறை கல்வி முடித்த 567 மாணவ மாணவியர்  என மொத்தம் 877 மாணவ மாணவியருக்கு  பதங்கங்கள் மற்றும்  பட்டங்களை  வழங்கினார்.

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையம் என்பதனை சுருக்கி RGNIYD என்றே குறிப்பிட்டு.....

அப்போது, விழாவில் பேசிய மத்திய அமைச்சர், "எல்லாரும் நல்லாருக்கீங்களா? ",  என தமிழில் ஆரம்பித்து பயற்சி மையத்தின் பெயரான ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையம் என்பதனை சுருக்கி RGNIYD என்றே குறிப்பிட்டு,  இதில் படித்து பட்டம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களைத்  தெரிவித்து கை தட்டி பாராட்டினார்.

பிரதமர் மோடியின் பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ள அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி பெரரை கூட குறிப்பிடாமல் சுருக்கமாக ஆங்கிலத்தில் கூறி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

 இதையும் படிக்க    } ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி : "பா.ஜ.க. அடக்குமுறைகளை ஏவி விடுகிறது,.... நீதி வென்றே தீரும்! - வைகோ