'மக்களை தேடி மருத்துவம்' ; வீடுகளுக்கே சென்று மருந்துகள் கொடுக்கும் தமிழக அரசு.! புதிய திட்டத்தை அறிவித்தார் அமைச்சர்.!

'மக்களை தேடி மருத்துவம்' ; வீடுகளுக்கே சென்று மருந்துகள் கொடுக்கும் தமிழக அரசு.! புதிய திட்டத்தை அறிவித்தார் அமைச்சர்.!

'மக்களை தேடி மருத்துவம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 20 லட்சம் நீரிழவு , இரத்த அழுத்தம் உள்ளவர்களை கண்டறிந்து வீடுகளுக்கே சென்று மருந்துகள் கொடுக்கும் பணிகளை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். 

சென்னை கே.கே.நகரில் விருகம்பாக்கம் தொகுதிகுட்பட்ட பாஜக,அதிமுக, தேமுதிக,அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மருத்துவத்துறை அமைச்சரும் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நாளை மறுநாள் ஒன்றிய  மருத்துவ துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஆனால் ஹர்ஷவர்தன் ராஜினாமா செய்ததால் புதிய அமைச்சர் பதவியேற்றவுடன் நேரம் கேட்டு டெல்லி செல்ல உள்ளோம்.  திட்டமிட்டப்படி தமிழ்நாடு செயலாளர் மட்டும் நாளை டெல்லி சென்று ஒன்றிய மருத்துவ துறை செலாளரை சந்தித்து கூடுதல் தடுப்பூசி , எம்ய்ஸ் , புதிய மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்ட தமிழ்நாடு தேவைகள் குறித்து வலியுறுத்தவுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக்கல்லூரிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றிய  அரசு தெரிவித்துள்ள வழிகாட்டுதல் படி பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காலத்தில் நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, 20 லட்சம் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களது வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்குவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. 'மக்களை தேடி மருத்துவம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வீடுகளுக்கே சென்று மருந்துகள் கொடுக்கும் பணிகளை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்" எனத் தெரிவித்தார்.