தமிழக அரசு உக்ரைனுக்கு குழு அனுப்பியிருக்காங்க...இவர்களுக்கு அங்கு என்ன வேலை?...அண்ணாமலை கேள்வி.!!

திமுக கட்சியின் குழு உக்ரைன் சென்று இருப்பது, முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் மட்டுமே என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

தமிழக அரசு உக்ரைனுக்கு குழு அனுப்பியிருக்காங்க...இவர்களுக்கு அங்கு என்ன வேலை?...அண்ணாமலை கேள்வி.!!

பிரதமர் மோடியின் 85 வானொலி உரையை மனதின் குரல் என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நந்தனத்தில் நடைபெற்று இருக்கக்கூடிய 45 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டார்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 

மத்திய அரசின் முயற்சியால் 1200 மாணவர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா வந்துள்ளனர்.13,600 மாணவர்கள் நாளை இந்தியா வருகிறார்கள்..இன்னமும் வருவார்கள்.. உலகில் உள்ள எந்த பிரதமரும் செய்ய முடியாத ஒரு முயற்சியை பிரதமர் மோடி இரு நாட்டு தலைவர்களிடமும் பேசி செய்து காண்பித்து உள்ளார் என்றார்.

ஆனால் இங்கு தமிழக அரசின் கடமை மாணவர்களின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை வழங்குவது, அதை தமிழகத்தில் பாஜக செய்து வருகிறது..இந்த நேரத்தில் உக்ரைக்கு தமிழக அரசு குழு அனுப்பி உள்ளது.. இவர்களுக்கு அங்கு என்ன வேலை? இது அவர்கள் பணியே கிடையாது ? ஒரு மாநிலத்தின் பணி இதுவல்ல, அதற்கான பணியை மத்திய அரசு ஏற்கனவே செய்து வருகிறது என்றும்  இது முழுக்க திமுக அரசின் அரசியல் ஆதாயம் என்றார்..

திமுக கூட்டணி ஒரு முரண்பாடான கூட்டணி, இந்த கூட்டணி வருகின்ற காலத்தில் எப்படி இருக்கும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் என தமிழக மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என்றார்..

தொடர்ந்து பேசிய அவர், ஒரு பள்ளியில் மதமாற்றம் நடைபெற்றால் எல்லா கிறித்துவப் பள்ளியும் அப்படி கிடையாது என கூறிய அவர், தமிழக மக்கள் பாஜகவை 3 ஆம் பெரிய கட்சியாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் வேறு யாரும் ஏற்றுக்கொள்ள  தேவை இல்லை யாருடைய சான்றிதலும் தேவை இல்லை என்றார்.