முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மீறினால் அபராதம் விதிக்கப்படும் - தமிழக அரசு

தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மீறினால் அபராதம் விதிக்கப்படும் - தமிழக அரசு

கொரோனா தொற்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.  தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1472 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 7500 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு  சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதே தொற்று அதிகரித்து வருவதற்கு  காரணம் என கூறப்படும் நிலையில்  கொரனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முகக் கவசம் அணியாமல் இருப்பவர்கள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களிடம், தற்போது நடைமுறையில் உள்ள பொது சுகாதார சட்டத்தின்படி அபராதம் விதிக்க அரசு ஆணை பிறப்பிததிருக்கிறது.