உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய சூடான் நாட்டு இளைஞர்...! 1 கிலோ 850 கிராம் தங்கம்...!

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய சூடான் நாட்டு இளைஞர்...! 1 கிலோ 850 கிராம் தங்கம்...!
Published on: 
Updated on: 
1 min read

சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 850 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் பயணம் செய்த சூடான் நாட்டை சேர்ந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். உடமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். 

அப்போது உள்ளடைக்குள் தங்கம் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 82 லட்சத்து 41 ஆயிரம்  மதிப்புள்ள 1 கிலோ 850 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் சூடான் நாட்டு இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com