அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம் ... மத்திய அமைச்சருடன் சந்திப்பு...

சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம் ... மத்திய அமைச்சருடன் சந்திப்பு...

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும்  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றனர்.

முன்னதாக  செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் இன்று மதியம் 2 மணி அளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். 11 புதிய மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், நீட் தேர்வு சம்பந்தமாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் கொடுக்க இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

சித்தா பல்கலைக்கழகம் அமைவது குறித்து நேற்று மாலை முதல் முதல்வரின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை அருகாமையில் சித்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் சில இடங்களை பார்த்து உள்ளதாகவும் தெரிவித்தார்.