எதிர் கட்சியும் பாராட்டுக்குரிய ஆட்சித்தான் நடத்தி வருகிறார்கள்... அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு !!

சென்னை வடபழனி கோவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயகுமார் போன்று ஒரு சிலர் மட்டுமே விமர்சிக்கிறார்கள் எனவும் மற்றபடி எதிர் தரப்பினரும் பாராட்டும் ஆட்சி தான் நடக்கிறது என்றார்.

எதிர் கட்சியும் பாராட்டுக்குரிய ஆட்சித்தான் நடத்தி வருகிறார்கள்... அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு !!

சென்னை வடபழனி கோவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

இந்து சமய அறநிலையத்துறை பொருத்தவரையில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார், அதன்படி கலத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் சென்னை  வடபழனி கோவிலில்  மணமக்கள் உடைமாற்று அறை, தங்கும் அறைகள் விரைவில் கட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக திருப்பணி நடைபெறாத கோவில்களில் திருப்பணி நடத்தப்படும் என்ற அவர், தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆகம விதிப்படி கோவில் புனரமைக்கப்படும் என்றார். 

இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை சார்பில் 12 ஆம் தேதியில் இருந்து ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுவதாகவும் ஊரடங்கு முடியும் வரை உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என்றார். சென்னையை பொருத்த வரையில் உணவுக்கு பஞ்சம் இல்லை, உணவு இல்லாத நிலை ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், எதிர்கட்சிகளையும்  ஒருங்கிணைத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தொற்று பாதிப்பு, பலி எண்ணிக்கை என அனைத்திலும் வெளிப்படை தன்மையுடன் தான் தெரிவித்து வருவதாக கூறிய அவர், ஜெயகுமார் போன்று ஒரு சிலர் மட்டுமே விமர்சிக்கிறார்கள் எனவும் மற்றபடி எதிர் தரப்பினரும் பாராட்டும் ஆட்சி தான் நடக்கிறது என்றார். 

மேலும், கருத்துவேறுபாடுகள் ஏதும் இன்றி ஒற்றை தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், கடந்த ஆட்சியில் ஒரே உறையில் நான்கு ஐந்து கத்திகள் இருந்தது, ஆனால் திமுக ஆட்சியில் ஒரே கத்தி தான் இருக்கிறது என தெரிவித்தார்.