அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தரப்பு ஆலோசனை...அவசரம் அவசரமாக சென்னை திரும்பிய ஓபிஎஸ்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தரப்பு ஆலோசனை நடத்திய நிலையில்  அவசரம் அவசரமாக  ஓபிஎஸ் சென்னை திரும்பியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தரப்பு ஆலோசனை...அவசரம் அவசரமாக  சென்னை திரும்பிய ஓபிஎஸ்!
Published on
Updated on
1 min read

அதிமுக ஒற்றை தலைமை பதவிக்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே அதிகார போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக  எடப்பாடி பழனிச்சாமிக்கு இணக்கமாக சென்ற ஓபிஎஸ் தற்போது ஒற்றை தலைமை பதவியை விட்டுக்கொடுக்க மறுத்து  வருகிறார். இதனால் அதிருப்தியைடந்த எடப்பாடி பழனிச்சாமி,  சசிகலாவை போல் ஓபிஎஸ்ஸையும் தூக்கி எரிந்து விட்டு அதிமுகவை கைப்பற்றும் வகையில் பல்வேறு  முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஒட்டுமொத்த அதிமுக முன்னணி நிர்வாகிகளையும் தன் பக்கம் வைத்துள்ள ஈபிஎஸ்,  ஜுலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் எடுக்க போகும் நடவடிக்கைகள் குறித்து  இன்று தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில்,  நேற்று  சொந்த ஊரான தேனிக்கு சென்ற ஓபிஎஸ் இன்று அவசர அவசரமாக சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவரை ஆதரவாளர்கள் வரவேற்றனர். அப்போது எடப்பாடி தரப்பு  ஆலோசனை கூட்டம் தொடர்பாக  செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார் ஓபிஎஸ்.

அதன் பின்னர் ஆதரவாளர்கள் புடைசூழ சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்திற்கு சென்ற ஓபிஎஸ்  தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.   

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com