மருத்துவப் படிப்பு : சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது!!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

மருத்துவப் படிப்பு : சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது!!

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரத்து 349 இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 650 இடங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 999 எம்.பி.பி. எஸ். இடங்களுக்கும், அரசு கல்லூரியில் 200 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் ஆயிரத்து 760 இடங்கள் என மொத்தம் ஆயிரத்து 930 பி.டி. எஸ். இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

அதன்படி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு 76 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்களுக்கு 156 விண்ணப்பங்களும், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள் 360 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.