"கள் இறக்க அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" வேளாண்துறை அமைச்சர்! 

"கள் இறக்க அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" வேளாண்துறை அமைச்சர்! 

கள் இறக்க அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளான்மை பல்கலைக் கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி பல்கலைக்கழக அண்ணா அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முன்னதாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கின் அருகில் அமைக்கப்பட்டு இருந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியினை தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். கண்காட்சியில் 25 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கம்பு ,கேழ்வரகு , ராகி , திணை உள்ளிட்ட பயிர் வகைகள், நவதானியங்களில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடப்பெற்று இருந்தன.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அதிக விளைச்சல் புதிய ரகங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக துறை சார்ந்த நிபுணர்களை வெளிநாட்டில் புதிய பயிற்சி பெற அனுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறுதானிய வளர்ச்சிக்கு அரசு 82 கோடி ரூபாய ஒதுக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடா்ந்து பேசிய அமைச்சா், தென்னை விவசாயிகள் கள் இறக்க அனுமதிப்பது குறித்து கோரிக்கைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அனைவாிடமும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டாா். அதனை தொடர்ந்து, பல்கலைக்கழக அண்ணா அரங்கில் சர்வதேச சிறுதானிய கருதரங்கானது நடைபெற்றது. இந்த கருத்தரங்கானது நேற்று துவங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைப்பெறுகிறது. 

இதையும் படிக்க:"வன திருத்த மசோதா, மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை" உயர்நீதிமன்றம்!