ககன்யான் திட்டத்திற்கு இந்தாண்டு வாய்ப்பில்லை... இஸ்ரோ தலைவர் சிவன்...

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ககன்யான் திட்டத்திற்கு இந்தாண்டு வாய்ப்பில்லை... இஸ்ரோ தலைவர் சிவன்...
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக இந்தாண்டு டிசம்பர் மாதம் இதற்கான சோதனை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் உதிரி பாகங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ககன்யான் திட்டம் இந்தாண்டு நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான தொழில்துறையினரிடம் இருந்து பொருட்கள் வாங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.