சங்கை அறுத்துடுவேன்,பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்,..போலீசாரையே மிரட்டிய ஹிந்து முன்னணி தலைவர்.! 

சங்கை அறுத்துடுவேன்,பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்,..போலீசாரையே மிரட்டிய ஹிந்து முன்னணி தலைவர்.! 

சங்கை அறுத்துவிடுவேன் என்று காவல்துறையினரையே மிரட்டிய ஹிந்து முன்னணி நபரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் ஊரடங்கால் காவல்துறையினர் சாலையில் காவல்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மாஸ்க் இல்லாமல் ஒருவர் வந்தபோது அவரிடம் மாஸ்க் ஏன் அணியவில்லை என்று காவலர்கள் கேட்டுள்ளனர். அதோடு 200 ரூபாய் அபராதம் விதித்து இருசக்கர வாகனத்தின் சாவியையும் வாங்கி வைத்துள்ளனர். 

இந்த தகவலை இருசக்கர வாகனத்தில் வந்தவர் யாருக்கோ தொலைபேசியில் கூற, சிறிது நேரத்தில் அங்கு ஒரு கூட்டத்தை கூட்டி வந்த நபர் காவல்துறையினரை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கியுள்ளார்.மோசமான, ஆபாசமான வார்த்தைகளால் காவல்துறையினரை திட்டத் தொடங்கிய அவர் காவல்துறையினரை பெட்ரோல் ஊத்தி கொளுத்தி விடுவேன் என்றும் சங்கை அறுத்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். 

மேலும் அபராதமாக வாங்கிய 200 ரூபாயை திரும்பக்கொடுக்க வேண்டும் என்றும், திரும்ப கொடுக்கவில்லை என்றால் நாளை இந்த செக்போஸ்ட்டை அடித்து நொறுக்கி விடுவோம், நாளை எங்கள் கட்சியை சேர்ந்தவர்களை திரட்டி போராட்டம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். நான் ஒன்றிய தலைவன், எங்கள் தலைவருக்கு தெரிந்தால் பிரச்சனை வேறு மாதி ஆகிவிடும். நாங்கள் அராஜகம் செய்வோம் என காவல்துறையினரை மிரட்டியுள்ளார்.

இதைக் கேட்ட காவல்துறையினரும் "200 ரூபாய்க்கு ரசீது கொடுத்திருக்கிறோம். ஏன் அபராதம் விதித்தோம் என்று காரணத்தை உங்கள் ஆளிடமே கேளுங்கள், எங்களை ஏன் இப்படி வேலை செய்ய விடாமல் தடுக்கிறீர்கள்" என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதைப் பற்றி விசாரிக்கையில், காவல்துறையினரை கொலை செய்துவிடுவோம் என்று விமர்சித்தவர் ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் செல்லப்பாண்டி என்று தெரியவந்தது.மேலும் அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.