மகளிர் உரிமைத் திட்டம்: உதவி மையம் இன்று முதல் செயல்படும்!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த உதவி மையங்கள் இன்று முதல் செயல்பட தொடங்குகிறது. 

ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டது, மீண்டும் விண்ணப்பங்கள் பதிவு செய்வது, ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு உரிமைத் தொகை வராமல் இருப்பது உட்பட எந்த சந்தேகங்கள் குறைகள் இருந்தாலும் பொதுமக்கள் உதவி மையத்தை அணுகி தீர்வுக் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நாளை முதல் உதவி மையம் செயல்பட உள்ளது. நிராகரிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதல் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பபடும் எனவும், வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி பொதுமக்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.