தானியத்தில் விஷம் கலந்து வைத்த விவசாயி...அப்பாவி மயில்கள் சாப்பிட்டு உயிரிழந்த சோகம்!!

தானியத்தில் விஷம் கலந்து 6-மயில்களை கொன்ற விவசாயியை வனத்துறையினா் கைது செய்தனர்.

தானியத்தில் விஷம் கலந்து வைத்த விவசாயி...அப்பாவி மயில்கள் சாப்பிட்டு உயிரிழந்த சோகம்!!

திருவண்ணாமலை அருகே கீரனூர் ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜா. இவரது விவசாய நிலத்தில்  மயில்கள் மற்றும் எலிகள்  தொல்லையை கட்டுப்படுத்த விஷம் கலந்த தனியத்தை வைத்திருந்தார்.

இந்த விஷத்தை சாப்பிட்டு 6 மயில்கள் உயிரிழந்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட வனஅலுவலர் அருண் லால் ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.

அதன்பேரில் திருவண்ணாமலை வனசரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் அந்த கிராமத்தில் சோதனை செய்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி காசிராஜா என்பவர் விவசாய விளை நிலத்தில் 1ஆண் மயில்  மற்றும் 5 பெண் மயில்  உள்பட மொத்தம் 6 மயில்கள் விஷத்தை சாப்பிட்டு இறந்து கிடந்தது. வனத்துறையினர் உயிரிழந்த 6 - மயில்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக விவசாயி காசிராஜாவை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தானியத்தில் விஷம் கலந்து வைத்து மயில்களை  விவசாயி  கொன்றது தெரியவந்தது.