வருகிறது தமிழக உள்ளாட்சித் தேர்தல்... இன்று ஆலோசனை நடத்துகிறது தேர்தல் ஆணையம்...

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இன்று தமிழக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

வருகிறது தமிழக உள்ளாட்சித் தேர்தல்... இன்று ஆலோசனை நடத்துகிறது தேர்தல் ஆணையம்...

தமிழகத்தில், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடைமுறைகளை நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அதன்படி, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் மாவட்ட அலுவலகங்களில் தேசிய தலைவர்கள் மற்றும்  அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வெளிப்படையாக வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து  ஆலோசிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்துக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடத்த, வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தமிழக தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.