14 கிலோ மீட்டர் நடந்தே சென்று மலை கிராம மக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர்....

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று மலை கிராம மக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 கிலோ மீட்டர் நடந்தே சென்று மலை கிராம மக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர்....

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகேயுள்ளது நெக்னாமலை கிராமம். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், மருத்துவம் மற்றும் நியாய விலைக்கடை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு சுமார் 14 கிலோமீட்டர் வரை நடந்தே செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று, மலைகிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.