மறைமுக தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி திமுக வேட்பாளர் வாக்குவாதம்.!!

ஆம்பூர் நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலுக்கான முறைகேடு நடப்பதாக கூறி திமுக வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மறைமுக தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி திமுக வேட்பாளர் வாக்குவாதம்.!!

ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவருக்கான மறைமுக வாக்குப்பதிவு துவங்கியநிலையில், முதல் வார்டு உறுப்பினர்  ரஜியா என்பவர் மட்டும் வாக்களிக்க துவங்கிய  நிலையில் திமுகவின் தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்   ஏஜாஸ் அகமது என்பவர், தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி வாக்கு பதிவு மையத்திற்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்தமேஜை மீது இருந்த கோப்புகள் அனைத்தையும் தூக்கி எறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார். இதனால் தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் தேர்தலை நடத்த கோரி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.