முதலமைச்சரின் முயற்சிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அமைகிறது...திருமாவளவன்.!!

முதலமைச்சரின் முயற்சிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அமைகிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் முயற்சிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அமைகிறது...திருமாவளவன்.!!

விசிக கட்சி தலைவர் திருமாவளவன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

முதலமைச்சரின் முயற்சிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அமைகிறது. சமூகநீதியை பாதுகாக்கும் பொருட்டு அவர் முன்னெடுக்கும் முயற்சி போற்றுதலுக்குரியது என்றார்.

சமூக நீதியை பாதுகாக்க அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விசிக உறுதுணையாக இருக்கும். அவர் நலமோடு வளமோடு நோய் நொடியின்றி வாழ விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தெரிவித்தார்.   

தொடர்ந்து பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி மறைமுக தேர்தலில் மேயர், துணை மேயர், நாகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் இடங்களின் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு திமுக சார்பில் கே.என் நேரு, ஏவ வேலு, ஆ.ராசா, ஆர்எஸ் பாரதி ஆகிய நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.