3 மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் முதல்வர்...! என்ன காரணம்...?

3 மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் முதல்வர்...! என்ன காரணம்...?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28.11.2022(நாளை) 3 மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறார். 

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி செல்கிறார். பின்னர்,பெரம்பலூர் மாவட்டத்தில் 36-எறையூர் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனால் பாதுகாப்பு கருதி அந்த மாவட்டத்தில் நாளையும், 29 ஆம் தேதியும் டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும் முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு அந்த பகுதிகளில் பாதுகப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க : சென்னையில் கடும் பனிமூட்டம்...! திருப்பி விடப்பட்ட விமானங்கள்...!