வடகிழக்கு பருவமழை பாதிப்பு... 200 வார்டுகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற உள்ளது. ஆழ்வார்ப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின், மருத்துவ முகாமை துவக்கி வைக்க உள்ளார்

வடகிழக்கு பருவமழை பாதிப்பு...  200 வார்டுகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது..

அதுமட்டுமின்றி மழை நீரில் அதிகளவில் கொசு உற்பத்தியாகும் என்பதால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது..இதன் காரணமாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற உள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைப்பெறும் சிறப்பு மருத்துவ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை காலை தொடங்கி வைக்க உள்ளார்..பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவல் இருந்து வரும் நிலையில், சிறப்பு மருத்துவ முகாம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படுவதோடு,பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.