”மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து முதலமைச்சர் திட்டமிடுகிறார்” அன்பில் மகேஷ் பேச்சு!

”மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து முதலமைச்சர் திட்டமிடுகிறார்” அன்பில் மகேஷ் பேச்சு!
Published on: 
Updated on: 
1 min read

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து திட்டமிடுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கும் பணியினைத் தொடங்கி வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்கள் நன்றாக உணவு உட்கொண்டு விளையாடி நன்றாகப் படிப்பதையே முதலமைச்சர் எதிர்ப்பார்ப்பதாகவும், மாணவர்களை வாழ்க்கையில் உயர்த்த வேண்டும் என்பதையே தனது பொறுப்பாகக் கொண்டு பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com