குடும்பத்தை வளர்க்க, குடும்ப நிதியை பெருக்க தான் துபாய் சென்றுள்ளார் முதலமைச்சர்-அண்ணாமலை.!!

குடும்பத்தை வளர்க்கவும், குடும்ப நிதியை பெருக்கவும் முதலமைச்சர் துபாய் சென்றுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குடும்பத்தை வளர்க்க, குடும்ப நிதியை பெருக்க தான் துபாய் சென்றுள்ளார் முதலமைச்சர்-அண்ணாமலை.!!

தமிழக அரசு தாக்கல் செய்த 2022 ஆண்டிற்கான பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என தெரிவித்து  தமிழக பாஜக சார்பில்  மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. அதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை கூறுகையில், 

ஓட்டை பானையை வைத்து கொண்டு திமுக மாடலாக நினைக்கிறார்கள் என்றும் தமிழகத்தில் மொத்த தேர்தல் வாக்குறுதி குறித்து தினமும் பொய் சொல்கிறார்கள் என கூறினார்.

கல்வி பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டும் 84% கொடுக்கப்படுகிறது. மீதி 16% திமுககாரர்களுக்கு கமிஷனாக போக போகிறது என கூறிய அவர், இல்லம் தேடி கல்விக்கான நிதியை மத்திய அரசு தான் கொடுக்கிறது என கூறினார். 

மதுரவாயல் இரட்டை அடுக்கு பாலத்தை திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்தது. ஆனால் தற்போது 5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

மொத்தத்தில் இது தமிழக பட்ஜெட் இல்லை,  கோபாலபுரம் பட்ஜெட் என கூறிய அண்ணாமலை, அமைச்சர்கள் பி.டி.ஆர், ஏ. வ வேலு, துரைமுருகன், செந்தில் பாலாஜி ஆகியோர் துறைகளுக்கு அதிகமாக பட்ஜெட் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் நோக்கம் அமைச்சர்களை திருப்திபடுத்துவது தான் என குற்றம்சாட்டினார்.