
2022ஆம் ஆண்டுக்கான கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர் பரத் சுப்பிரமணியனுக்கு 8 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் பரத் சுப்பிரமணியன், 2019ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டத்தையும், 2022 ஆம் ஆண்டுக்கான கிராண்ட மாஸ்டர் பட்டத்தையும் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் மாணவர் பரத் சுப்பிரமணியத்திற்கு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 3 லட்சம் ரூபாயும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 5 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த அவருக்கு 8 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.