டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!

டெல்டா மாவட்டங்களில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!

கேரளா மற்றும் அதனையொட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

வரும் 21ந்தேதி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளது.