தமிழ்நாட்டில் வரும் 25, 26ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை...எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் வரும் 25, 26ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை...எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழைக்கு வாய்ப்பு:

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரு நாட்களுக்குள் குமரிக்கடலை நோக்கி நகரக்கூடும் என்பதால் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதையும் படிக்க: வெளியே வந்தால் கால் இருக்காது...மிரட்டிய அடுத்த நாளே சசிகலா புஷ்பாவின் வீட்டின் மீது தாக்குதல்...பின்னணி யார்?

இதனால் இன்று தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், தொடர்ந்து வரும் 25ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

அதேபோல், வரும் 26ம் தேதி தேனி, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.