சுகேஷ் சந்திரசேகர் மீதான குற்றப்பத்திரிக்கையை ஏற்றது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்...!

இரட்டை இலை சின்னத்தைப்பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர் மீதான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுள்ளது. 

சுகேஷ் சந்திரசேகர் மீதான குற்றப்பத்திரிக்கையை ஏற்றது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்...!

இரட்டை இலை சின்னம் பெற்றுத்தருவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சுகேஷ் சந்திரசேகர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து சுகேஷ் சந்திரசேகரை கைது செய்த அமலாக்கத்துறை திகார் சிறையில் அடைத்துள்ளனர். 

அந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம் சுமத்தி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. மேலும் சுகேஷ் வைத்திருந்த பணத்துக்கான மூல ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் மீதான அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை சி.பி. ஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில்  டி.டி.வி. தினகரன் பெயர் சேர்க்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.