நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிக்கிறது: மா.சுப்பிரமணியன் விமர்சனம்...

நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிக்கிறது: மா.சுப்பிரமணியன் விமர்சனம்...

சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பா திக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது, தடுப்பூசி செலுத் தி கொண்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத் தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இதனையடுத்து செய் தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், அதனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசு தலைவர் நிராகரித்தபோது அ. தி.மு.க. மவுனம் காத்ததாக சுட்டிக் காட்டியுள்ளார்.