சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது... 

சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது... 

சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார்.

தமிழகத்திற்கும் தமிழ் இனத்திற்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த, தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருதுக்கு சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று சுதந்திர தினத்தன்று பெரும்பாலானோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில், சங்கரய்யாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று விருது வழங்கப்பட்டது.

சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கி கவுரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். விருதை பெற்றுக் கொண்ட சங்கரய்யா, தமக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையான 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை, முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சங்கரய்யாவின் மகன்கள் சந்திரசேகரன்-நரசிம்மன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.