பட்டாசு ஆலையில் வெப்பம் காரணமாக பயங்கர வெடிவிபத்து: ஒருவர் பலி

பட்டாசு ஆலையில் வெப்பம் காரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

பட்டாசு ஆலையில் வெப்பம் காரணமாக பயங்கர வெடிவிபத்து: ஒருவர் பலி

சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாரனேரி கிராமத்தில்,  தங்கப்பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

இங்கு 30-க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு ரகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று ஆலையின் ஒரு அறையில் பட்டாசு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை கலவை செய்யும் பணி நடைபெற்றபோது,

வெப்பம் காரணமாக மூலப்பொருட்களில்  உராய்வு ஏற்பட்டு வெடித்தது. இதில் அந்த அறை இடிந்து விழுந்து, பணியில் இருந்த இளைஞர் அரவிந்தசாமி  இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து   தீயணைப்புதுறையினர், காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.