கோயில் யானைகள்: அரசிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

கோயில் யானைகள்: அரசிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

அண்மைக் காலமாக கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் இயற்கை சூழலுடன் கோயில்களில் யானைகளை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கோயில்களில் குறைந்து வரும் யானைகள்:

பல்வேறு சிறப்புகளை கொண்ட யானைகளுக்காக அரசு சார்பில் மறுவாழ்வு முகாம்கள் செயல்படுகின்றன. எனினும், கோயில்கள் மற்றும் மடங்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மயூர நாதர் கோயில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயில் ஆகிய இரண்டு கோயில்களில் மட்டுமே யானைகள் உள்ளன. மாதத்திற்கு ஒருமுறை கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் குழுவினர் யானையை பரிசோதித்து சான்றளிக்கின்றனர்.  

யானை பாகன்:

தமிழரின் பாரம்பரியத்துடன் கலந்து விட்ட யானைகள், குழந்தை போல் பழகும் தன்மை கொண்டது என யானை பாகன்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை, கோயிலுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில், அங்குள்ள யானைப்பாகன் குடும்பத்துடன் 3 தலைமுறைகளாக பழகி வந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு யானைகள் இல்லாத நிலையில் அவற்றை வாங்கி தர பெரும் செல்வந்தர்கள் தயாராக இருந்தாலும், தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.