ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 4வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கத்தினர் 4 வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 4வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!!

சென்னை டி.பி. ஐ வளாகத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன தேர்வு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அரசுப்பள்ளியில் நிரப்பப்படாமல் உள்ள ஆசிரியர் பணியிடங்களை தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதேபோல, தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பை 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

4 வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் இதுவரை யாரும் வந்து தங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றும் இங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி சுகாதாரமற்ற சூழலில் போராடி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.