கல்வியை காசாக்கும் காலத்தில்... இலவச ஆன்லைன் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்...

கொரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் கல்வியை இழந்து தவித்து வரும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் வழியாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கல்வியை கற்றுக்  கொடுத்து வருகின்றனர்

கல்வியை காசாக்கும் காலத்தில்... இலவச ஆன்லைன் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்...
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. 
 
ஆனால், இந்த ஆன்லைன் வகுப்பில்  ஏழை,எளிய மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இவர்களின் இந்த நிலையை அறிந்த சென்னை ராயப்பேட்டை பகுதியை ஆசிரியர் முகமது ரபீக்  உடன் எட்டு ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக  கல்வியை பயிற்றுவித்து வருகின்றனர்.
 
மேலும்  இணையவழி கல்வி மட்டுமல்லாமல் பார்வையற்ற மாணவர்கள், விதவை பெண்களுக்கு தேவையான வகுப்புகளும், குறிப்பாக கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான கல்வியும் அளிக்கப்பட்டு வருவதாக கூறுகிறார் ஆசிரியர் முகமது ரபீக்.
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நல்ல பயன் இருப்பதாகவும், தான் நிச்சயம் நன்றாக படித்து வெற்றி பெறுவேன் என்கிறார் மாணவர் நைனா முகமது.
கல்வியை காசாக பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த கொடிய கொரோனா காலத்தில் இலவசமாக கல்வியை கற்றுத்தரும் செயல் வரவேற்பைப் பெற்றுள்ளது.