'வரிப்பணம் வீண்'.. நீர் தேக்கத் தொட்டி கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆகிறது.. இன்னும் திறக்கவில்லை - பொதுமக்கள் புகார்!!

பல்லடம் அருகே, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும், பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

'வரிப்பணம் வீண்'.. நீர் தேக்கத் தொட்டி கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆகிறது.. இன்னும் திறக்கவில்லை - பொதுமக்கள் புகார்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் குடிநீர்  தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில்  மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டது. குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் ஆகியும், இன்னமும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆழ்துளை கிணறு அமைத்து,  அதிலிருந்து, மின் மோட்டர் மூலம், நீர் ஏற்றி, 9-வது வார்டு மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, ஆழ்துளைக் கிணறு  அமைக்கப்பட்ட நிலையிலும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.