தமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நீண்ட நாட்களுக்கு பிறகு 27 மாவட்டங்களில் நாளை முதல் மதுபான மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அதன்படி, மொத்தமாக மதுபானங்களை யாருக்கும் விற்க கூடாது என்றும், சில்லறையாக தான் விற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள தமிழக அரசு,மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளி விட்டு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலி போடப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதற்குள் ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை வரைய வேண்டும் எனவும் கூறியுள்ள தமிழக அரசு,கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும்,பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.

மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் வாங்குமாறு, அவர்களை பணியாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.