கார்களில் டேப்- ஸ்பீக்கர் திருட்டு...மூகமுடி கொள்ளையன் கைவரிசை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார்களில் உள்ள டேப்- ஸ்பீக்கர் உள்ளிட்டவைகளை திருடி சென்ற முகமூக கொள்ளையர்களை போலீசார் சிசிடிவி காட்சி உதவியுடன் தேடி வருகின்றனர்.

கார்களில் டேப்- ஸ்பீக்கர் திருட்டு...மூகமுடி கொள்ளையன் கைவரிசை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதிபுரம் 5- வது தெருவை சேர்ந்த வேல்ராஜ் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கார்களில் டேப் மற்றும் ஸ்பீக்கர்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த விசாரணை மேற்க்கொண்ட போலீசார், திருட்டு நடந்த இடத்தில் பொருத்திவைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் அதில் பதிவானது தெரியவந்தது.

அதன்படி மூகமுடி கொள்ளையன் காரின் அருகே அமர்ந்து லைட் அடித்து பார்த்து யாரும் வராததை நோட்ட்மிட்ட பின்னர் காரைத் திறந்து டேட் மற்றும் ஸ்பீக்கரை கொள்ளையடித்து சென்றது கேமிராவில் பதிவாகி இருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு சங்கரன்கோயில் நகர போலீசார் வழக்குபதிவு செய்து காரில் டேப் ரெக்கார்டு, ஸ்பீக்கர்களை கொள்ளையடித்து சென்ற மூகமுடி கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.