எங்கள கேட்காம எதையும் செய்யக்கூடாது... எச்சரித்த தமிழக அதிகாரிகள்!! அதிர்ந்துபோன எடியூரப்பா

மேகதாது மட்டுமின்றி காவிரியின் குறுக்கே எந்த இடத்தில் அணை கட்டினாலும் எங்களின் அனுமதி தேவை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 

எங்கள கேட்காம எதையும் செய்யக்கூடாது... எச்சரித்த தமிழக அதிகாரிகள்!! அதிர்ந்துபோன எடியூரப்பா

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது.

இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்த விதிகளை மீறி கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெங்களுரு நகரில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் மேகதாது திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் கூறினார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத்து கடுமையாக மொத்தமாக பாதிக்கப்படும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட சமீபத்தில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கர்நாடக சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். காவிரியில் மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதற்கு கூட்டத்தில் தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கருத்து கடும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

மேகதாது மட்டுமின்றி காவிரியின் குறுக்கே எந்த இடத்தில் அணை கட்டினாலும் எங்களின் அனுமதி வாங்க வேண்டும்  என்று தமிழ்நாடு பிரதிநிதி அழுத்தமாக கூறினார். அதுமட்டுமல்ல உங்கள் அவசரத்திற்க்காக கருதி திறக்கப்படும் உபரிநீரை தமிழ்நாட்டுக்கான நீர் பங்காக கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என்றும் தமிழ்நாடு சார்பில் அழுத்தமாக சொல்லப்பட்டது.

அப்போது மேகதாது அணை திட்டம் பெங்களூரு குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்று சொல்லி கர்நாடக உறுப்பினர்கள் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறியதற்கு தமிழ்நாடு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக அரசின் கடுமையான அழுத்தத்தினால் கர்நாடக முதல்வர் என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்துப்போயுள்ளார்.