தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை...!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை...!

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவர் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் நீடிக்கும் பதற்றம்:

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிராக என்ஐஏ நடத்திய சோதனைகளை எதிர்த்து பல இடங்களில் பதற்றம் நீடித்து வருகிறது. தமிழகத்தில் கோவை ஈரோடு திருப்பூர்  மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது.  

டிஜிபி அறிக்கை:

இதனால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்களை குறிவைத்து வீசப்பட்டது தொடர்பாக 250 சந்தேக நபர்களிடம் விசாரித்து வருவதாக கூறியுள்ளார். அதேபோன்று, கோவையில் ஆர்ஏஎஃப் பிரிவுகள் உட்பட 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்” நிச்சயம்...கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு!

டிஜிபி எச்சரிக்கை:

மேலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள எனவும் டிஜிபி  எச்சரித்துள்ளார்.