"சமாதானமாய் இருப்பது தான் சனாதனம்" தமிழிசை சௌந்தர்ராஜன்!!

நல்ல சமாதானமாய் இருப்பது தான் சனாதனம் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்

28-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் மகாபாரதம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தை தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தெருக்கூத்து கலைகள் அழிய விடாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் இந்த தெருக்கூத்து நிகழ்ச்சி எந்த ஏற்றத்தாழ்வு இல்லாமல் எந்த பாகுபாடும் இல்லாமல் மக்களோடு மக்களாய் அனைவரும்  பார்க்கின்றனர் என தெரிவித்தார். நல்ல சமாதானமாய் இருப்பது தான் சனாதனம் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு வடிவில்  அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஒவ்வொன்றாக சென்று அவர் பார்வையிட்டார்.