தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..!

சென்னையில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..!

3 நாட்களுக்கு கனமழை:

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் 23 மாவட்டங்களில், இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி, கோவையில் கனமழை:

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையில் லேசான மழை:

சென்னையை பொறுத்த வரையில், இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.