”மத்திய அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு.....” முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கான காரணம் என்ன?!!

”மத்திய அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு.....” முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கான காரணம் என்ன?!!

சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டம் குறித்து திமுகவினரின் கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளிக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு குறித்து:

தமிழ்நாடு குறித்து பிரதமர் எதுவும் கூறவில்லை எனவும் திமுக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியும் அதற்கான பதில் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

கிடப்பில் திட்டம்:

மேலும் சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டம் குறித்து திமுகவினரின் கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளிக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  2007-ம் ஆண்டு முதல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் இதனை உடனடியாக புனரமைத்து செயல்படுத்த மத்திய அரசை திமுக வலியுறுத்தி உள்ளது எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

நிறைவேற்றப்படாத மசோதாக்கள்:

நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதா, மாநிலங்களின் உரிமைகள், மாநில அரசின் செயல்பாடுகளில் தமிழ்நாடு ஆளுநரின் குறுக்கீடுகள், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது குறித்தும் முதலமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி:

ஆன்லைன் கேமிங்கில் மக்கள் சிக்கித் தவிப்பதால் கடந்த வாரத்தில் மட்டும் நான்கு தற்கொலை சம்பவங்களை குறிப்பிட்ட முதலமைச்சர் அவை ஆளுநருக்குத் தெரியாதா என்று கேட்டுள்ளார்.  

மறுத்த பாஜக:

இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.  ராகுல் காந்தியின் உரையின் சில பகுதிகளை நீக்குவது குறித்து இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் ஒருவரின் கருத்துக்கள் நீக்கப்படுவது இது முதல் முறையல்ல என்றும், இரு அவைகளும் நாடாளுமன்ற மொழியைப் பயன்படுத்தி விதிகளின் கீழ் விவாதம் நடத்தும் இடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதானி குறித்து:

அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையை "தீங்கிழைக்கும் குறும்பு" மற்றும் "ஆராய்ச்சி செய்யப்படாதது" என்று கூறியுள்ளது பாஜக.  தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளிப்பதில் இல்லை என்று சொல்வது மரியாதைக்குரிய வழி என்று சுட்டிக்காட்டியுள்ளது பாஜக.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”இதற்கு அர்த்தம் மக்கள் மனதில் இருத்து அழித்துவிடலாம் என்பதல்ல....”