வேலைக்கு சென்ற 4 நாட்களிலேயே... தமிழக இளைஞர் சுட்டுக்கொலை...உடலை வேண்டி மனைவி கோரிக்கை!

வேலைக்கு சென்ற 4 நாட்களிலேயே... தமிழக இளைஞர் சுட்டுக்கொலை...உடலை வேண்டி மனைவி கோரிக்கை!

குவைத்தில் ஒட்டகம் மேய்க்க மறுப்பு தெரிவித்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட பட்டதாரி இளைஞரின் உடலை, தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். 

குவைத்துக்கு சென்ற தமிழக இளைஞர் சுட்டுக்கொலை:

திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரன், கடந்த 2ஆம் தேதி குவைத் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் வேலை கடினமாக உள்ளதாக குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்த தகவல் கடந்த 9ஆம் தேதி முத்துக்குமரனின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. 

உடலை வேண்டி பேரணி:

இந்நிலையில், முத்துக்குமரனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், அவரது மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் வலியுறுத்தி, 250க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிக்க: ஒரே நேரத்தில் இரண்டு மாஜிக்கள் வீடுகளில் சோதனை.. ! இது 3வது முறை..! அதிகாலையிலே பரபரப்பு..!

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முத்துக்குமரனின் மனைவி, தனது கணவரின் உடலை தமிழகம் கொண்டு வர முதலமைச்சர் உரிய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கண்ணீர் மல்க மனு:

இதேபோல் திருச்சியிலும், வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனைவியும் மகளும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சித்தாம்பூர் காவேரி பாளையத்தை சேர்ந்தவர் சின்னமுத்து புரவியான். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக சின்னமுத்து சவுதியில் வெல்டர் வேலைக்குச் சென்ற அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உரிய விசாரணை நடத்தி கணவரின் உடலை மீட்டுத் தர வேண்டும் என மனைவி அன்னக்கிளி மற்றும் மகள் நிவேதா ஆகியோர் ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.