27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு...

27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு...

தமிழகத்தில் புதிய ஆட்சி பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து ஐ.பி.எஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது  மேலும் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சி.பி.சி.ஐ. டி சைபர் கிரைம் பிரிவு எஸ்.பியான சுதாகர் காஞ்சிபுரம் எஸ்.பியாக நியமிக்கப்படுள்ளார்.  மேலும் சி.பி.சி.ஐ.டி சைபர் செல் எஸ்.பி சிபிச்சக்கரவர்த்தி திருப்பத்தூர் எஸ்.பியாகவும்,  நாகை எஸ்.பியாக இருந்த பிரகாஷ் மீனா திருப்பத்துர் மாவட்ட எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.