தமிழக பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு.. போக்சோ குறித்த விழிப்புணர்வுவை மேம்படுத்த கையேடு!!

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு.. போக்சோ குறித்த விழிப்புணர்வுவை மேம்படுத்த கையேடு!!

தமிழக சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், போக்சோ குறித்த விழிப்புணர்வு மற்றும் பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு தயாரித்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரமாக ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை, அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. அனைத்துப் பள்ளி நூலகங்களிலும் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள EMIS இணையத்தளம் மூலம் தனி செயலி உருவாக்கப்படும் என்றும் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.