இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்திற்கு சென்ற தமிழக முதல்வர்!

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று நடைபெற்றது. மணமக்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார்.

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15-க்கு மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார்.

இந்த நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் மணமக்களை வாழ்த்தினர்.