சட்டப்பேரவை முடிந்ததும் நடைபெறும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்.!  முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்க வாய்ப்பு.! 

சட்டப்பேரவை முடிந்ததும் நடைபெறும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்.!  முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்க வாய்ப்பு.! 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

தமிழக சட்டப்பேரவை கடந்த ஜூன் 21ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். 

இதனைத் தொடர்ந்து இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.