மாணவர்கள் நலன் கருதி +2தேர்வை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் .

மத்திய அரசின் ஆலோசனைப்படி மாணவர்கள் நலன் கருதி தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்

மாணவர்கள் நலன் கருதி +2தேர்வை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் .

சென்னை அடையார் வி.எச்.எஸ் மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ரத்ததான முகாமில் 150 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.

 

முகாமை துவக்கி வைத்த பின் எல்.முருகன் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், பிரதமர் மோடி அவர்களின் 7 ஆண்டு பணி நிறைவு பெற்று, 8 ஆம் ஆண்டு தொடக்கத்தை பெற்றதை ஒட்டி பாஜக சார்பில் இந்த வாரத்தை சேவை வாரமாக கருதி தினந்தோறும் மக்களுக்கு உணவுகள் மற்றும் கொரோனா நிவாரண உதவிகளை செய்து வருகின்றோம். மேலும் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரத்ததான முகாம்களை திறந்து வைத்துள்ளோம் என்று கூறினார்.

 

மேலும் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புதேர்வு குறித்து இன்னும் ஏன் ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை, மத்திய அரசு மாணவர் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்துவிட்டது. தமிழகத்திலும் மாணவர்கள் நலன் கருதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

 

மத்திய அரசு சார்பாக தடுப்பூசிகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் இதனை ஏற்றுக் கொள்ளாமள் குறை மட்டுமே கூறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்துகளையும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது கூடிய விரைவில் அதற்கான மருந்துகளையும் மத்திய அரசு வழங்கும் என்று கூறினார்.